என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவன் மனைவி பலி"
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள தொண்டராயன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவரும், இவரது மனைவி மனோன்மணியும்(60) மாரநேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
தொண்டராயன்பாடி மாதா கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் பலியானார். மனோன்மணி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோன்மணியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் பூதலூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேலஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70), விவசாயி. இவரது மனைவி முனியம்மாள் (60).
கணவன்-மனைவி இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையில் மின் விளக்கை போடுவதற்காக பெருமாள் சுவிட்சை அழுத்தினார்.
அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி முனியம்மாளும் அங்கு ஓடிவந்து கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த ராமன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). விவசாயி. இவரது மனைவி நாகம்மாள் (வயது 45).
இந்த நிலையில் இவர்களது மகள் விஜயலட்சுமிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் திருப்பூரில் வேலை பார்த்து வந்த பாலகிருஷ்ணனின் மகன் சவுரிராஜன், ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தான் வசித்து வந்த கூரைவீட்டின் மேற்கூரை பகுதியை மாற்ற முடிவு செய்தார்.
இதையொட்டி இன்று காலை பாலகிருஷ்ணன், தென்னங்தட்டிகளை வைத்து மேற்கூரையை கம்பியால் கட்டி கொண்டிருந்தார். அவர் அருகே நின்று கொண்டு மனைவி நாகம்மாள், மகள் விஜயலட்சுமி, மகன் சவுரிராஜன் ஆகியோர் உதவி செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென பாலகிருஷ்ணனின் கை , அங்கிருந்த மின்கம்பி மீது பட்டது. இதில் அவரை மின்சாரம் தாக்கியது.
மேலும் அருகில் நின்ற நாகம்மாள், விஜயலட்சுமி, சவுரிராஜன் ஆகிய 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து வீடு அருகே உள்ள திருப்பூண்டி வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பாலகிருஷ்ணன் உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
அங்கு விஜயலட்சுமி, சவுரிராஜன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி பலியான சம்பவம் திருக்குவளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
திண்டுக்கல் அருகே எரியோட்டில் இருந்து அய்யலூர் நோக்கி அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ சென்றது. வேங்கனூர் அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் பாகாநத்தம் சவுடகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 65). அவரது மனைவி சின்னத்தாய் (வயது 63) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், கார்த்திகேயன், ராமுத்தாய், ஆட்டோ டிரைவர் குமாரசாமி, உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகாண்டீபனிடம் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி ஆட்டோக்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் இப்பகுதியில் டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் வருகின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்